Market Update: ஒரு பங்கை விற்கும்போது அவசியம் தெரிந்து கொள்ள முக்கிய அம்சங்கள்?

பங்குச் சந்தை முதலீட்டில் ஆர்வம் அதிகரித்திருந்தாலும், நம்மவர்களுக்கு ஒரு பங்கை எப்போது வாங்குவது, விற்பனை செய்வது என தெரிவதில்லை. குறிப்பாக வாங்கும்போது எப்படியோ சிலர் சரியாக தேர்வு செய்திருந்தாலும், சரியான நேரத்தில் லாபத்தை புக் செய்யத் தெரிவதில்லை. இதனால் பலரும் நஷ்டத்தையே சந்திக்கின்றனர். சந்தையில் பங்குகளை எப்போது வாங்கலாம் என பரிந்துரை செய்யும் சிலர், எப்போது விற்பனை செய்யலாம் என்பதை கூறுவதில்லை. முதலீட்டாளர்கள் பலரும் குறைந்த விலையில் பங்குகளை வாங்கி விடுவர். ஆனால் அது எந்த அளவுக்கு செல்லும், எந்த சமயத்தில் வெளியேறலாம் என்பது…