Hurun Global Rich List 2025:டாப்பில் இருந்து வெளியேறிய முகேஷ் அம்பானி.. ரோஷினி நாடார் எந்த இடம் தெரியுமா?

சர்வதேச அளவிலான பில்லியனர்கள் பட்டியலை தொடர்ந்து ஹுருன் அமைப்பு வெளியிட்டு வருகின்றது. இந்த அறிக்கையில் தொடர்ந்து டெஸ்லா நிறுவனத்தின் தலைவர் எலான் மஸ்க் மீண்டும் 420 பில்லியன் டாலர்கள் சொத்து மதிப்புடன் முதலிடம் பெற்றுள்ளார். இது 82% அளவுக்கு அதிகரித்துள்ளது. கடந்த 5 ஆண்டுகளில் 4வது முறையாக எலான் மஸ்க் தொடர்ந்து முதலிடத்தில் இருந்து வருகிறார். இரண்டாவது இடத்தில் அமேசான் நிறுவனம் ஜெஃப் பெசோஸ் 266 பில்லியன் டாலர்களுடனும், மெட்டா நிறுவனம் மார்க் ஜூக்கர்பெர்க் 242 பில்லியன் டாலர்களுடன் மூன்றாவது இடத்திலும் இடம் பெற்றுள்ளனர்.…

Opening bell: வீழ்ச்சியுடன் தொடங்கிய சென்செக்ஸ், நிஃப்டி..ஐடி பங்குகள் கவனம்?!

Opening bell: சர்வதேச சந்தைகளில் நிலவி வரும் கலவையான காரணிகளுக்கு மத்தியில், இன்று (மார்ச் 21) இந்திய பங்குச் சந்தை குறியீடுகள் சரிவில் காணப்படுகின்றன. குறிப்பாக சென்செக்ஸ் 119.55 புள்ளிகள் குறைந்து, 76,228.51 புள்ளிகளாகவும், நிஃப்டி 17.95 புள்ளிகள் குறைந்து, தொடர்ந்து 23,172 என்ற நிலையில் 23,000 புள்ளிகளை கடந்தும் காணப்படுகிறது. இதில் 1384 பங்குகள் ஏற்றம் கண்டும், 817 பங்குகள் சரிவிலும், 158 பங்குகள் பெரிய மாற்றம் ஏதும் இன்றியும் காணப்படுகின்றன. இன்றைய ஏற்ற இறக்கத்தின் மத்தியில் பஜாஜ் பைனான்ஸ், ஓ.என்.ஜி.சி, நெஸ்டில்,…

Gold:அச்சச்சோ தங்கம் விலை இவ்வளவு அதிகரிக்க போகுதா? இனி கனவில் தான் வாங்கணுமா?

Gold: தங்கம் விலையானது பியூச்சர் சந்தையில் 3,065.09 என்ற வரலாற்று உச்சத்தை எட்டியுள்ளது. இதே இந்திய சந்தையில் 24 கேரட் தங்கம் விலையானது 10 கிராமுக்கு 90,450 ரூபாயாகவும் எட்டியுள்ளது. 22 கேரட் தங்கம் விலையானது 10 கிராமுக்கு 82,910 ரூபாயாகவும் உச்சத்தை எட்டியுள்ளது. இந்த போக்கு இன்னும் தொடரலாம் என்ற கவலையும் எழுந்துள்ளது. சர்வதேச நாடுகளில் நிலவி வரும் நிச்சயமற்ற சூழலுக்கு மத்தியில், பணவீக்கம் மீண்டும் அதிகரிக்க வாய்ப்பிருப்பதாக பெடரல் ரிசர்வ் வங்கி கவலை எழுப்பியுள்ளது. மேற்கொண்டு அமெரிக்க அதிபர் டிரம்பின் வரி…

Accenture: ஆக்சென்ச்சரின் அப்டேட் சொல்வதென்ன? இன்ஃபோசிஸ், விப்ரோ, டிசிஎஸ் பங்குகளும் வீழ்ச்சி காணுமா?

IT stocks: இந்தியாவின் முன்னணி ஐடி நிறுவனங்களாக இன்ஃபோசிஸ், விப்ரோ, டிசிஎஸ் உள்ளிட்ட ஐடி பங்குகள் வீழ்ச்சி காண வாய்ப்பிருப்பதாக எதிர்பார்க்கப்படுகிறது. இது சர்வதேச ஐடி நிறுவனமான ஆக்சென்ச்சரின் இரண்டாவது காலாண்டு முடிவானது பலவீனமாக வந்த நிலையில், அப்பங்கானது 10% மேல் நியூயார்க் சந்தையில் கடும் வீழ்ச்சியை சந்தித்துள்ளது. இதன் பாதிப்பு இந்திய நிறுவனங்களிலும் இருக்கும். இந்திய நிறுவனங்களின் வருவாய் வீழ்ச்சி காணும் என அஞ்சப்படுகிறது. இது அவற்றின் பங்கு விலையிலும் சரிவைக் காண காரணமாக அமையலாம். எச்சரிக்கை மணியா? இந்திய ஐடி நிறுவனங்களுக்கான…

Closing Bell:சென்செக்ஸ் 899 புள்ளிகள் ஏற்றத்தில் முடிவு! நிஃப்டியின் போக்கு என்ன?

Closing Bell: இந்திய ஈக்விட்டி குறியீடுகள் அனைத்தும் ஏற்றம் கண்டு முடிவடைந்த நிலையில், சென்செக்ஸ் 899 புள்ளிகள் அல்லது 1.19% அதிகரித்து, 76,348.06 புள்ளிகளாக முடிவடைந்துள்ளது. நிஃப்டி குறியீடானது 283.05 புள்ளிகள் அல்லது 1.24% ஏற்றம் கண்டு, 23,190.65 புள்ளிகளாக முடிவடைந்துள்ளது. சர்வதேச அளவிலான சாதகமான காரணிகளுக்கு மத்தியில், இன்று பங்குச் சந்தையில் முக்கிய குறியீடுகள் கேப் அப் ஆகி தொடங்கின. முடிவிலும் நிஃப்டி 23,000 புள்ளிகளுக்கு மேல் முடிவடைந்துள்ளது. அனைத்து குறியீடுகளும் ஏற்றத்தில் முடிவடைந்துள்ள நிலையில், மெட்டல், மீடியா, ஐடி, எஃப்.எம்.சி.ஜி, ஆட்டோ,…

SBI credit card: எஸ்பிஐ வாடிக்கையாளரா நீங்க.. ஏப்ரல் 1 முதல் முக்கிய மாற்றங்கள்!

SBI Credit Card: எஸ்பிஐ கிரெடிட் கார்டுகளுக்கு வழங்கப்படும் ரிவார்டு பாயிண்ட்டுகள் மற்றும் மற்ற சலுகைகளில், வரவிருக்கும் ஏப்ரல் 1-ல் இருந்து பல மாற்றங்கள் வரவுள்ளன. எஸ்பிஐ கார்டு இணையதள அறிக்கையின் படி, எஸ்பிஐ கார்டு சிம்பிளிகிளிக் (SBI Card SimplyCLICK), ஏர் இந்தியா எஸ்பிஐ பிளாட்டினம் கிரெடிட் கார்டு, ஏர் இந்தியா எஸ்பிஐ சிக்னேச்சர் கிரெடிட் கார்டு உள்ளிட்ட கார்டுகளுக்கு மேற்கண்ட மாற்றங்கள் பொருந்தும் என அறிவித்துள்ளது. ரிவார்ட் பாயிண்டுகள் கட்? சிம்பிளிகிளிக் எஸ்பிஐ கிரெடிட் கார்டு மூலம் ஸ்விக்கியில் செய்யப்படும் பரிவர்த்தனைகளுக்கு…

Adani:அதானி குழுமத்தால் அதிகரிக்கும் நெருக்கடிகள்.. புலம்பும் வயர்கள் மற்றும் கேபிள் நிறுவனங்கள்.. ஏன்?

Adani: போட்டிகள் குறைவாக, அதிக வருமானம் உள்ள ஒவ்வொரு துறைகளாக பார்த்து பார்த்து காலடி எடுத்து வைத்து வரும் அதானி குழுமம், தற்போது கேபிள்ஸ் மற்றும் வயர்ஸ் துறையில் நுழைந்துள்ளது.  அதானி எண்டர்பிரைசஸ் நிறுவனத்தின் துணை நிறுவனமான கட்ச் காப்பர் நிறுவனம், பிரணீதா ஈகோகேபிள்ஸ் லிமிடெட் என்ற நிறுவனத்தை 50% பங்குடன் இணைத்துள்ளதாகவும், அதன் மூலம் வயர்கள் மற்றும் கேபிள் வணிகத்தில் ஈடுபட உள்ளதாகவும் அறிவித்துள்ளது. கடும் வீழ்ச்சி! அதானி குழுமத்தின் இந்த அறிவிப்பை அடுத்து  கே இ ஐ இண்டஸ்ட்ரீஸ் லிமிடெட், பாலிகேப்…

SWP:ரிட்டயர்மெண்டுக்கு பின்னாடியும் ப்ரீயா இருக்கனுமா? இதை மட்டும் செய்ங்க போதும்?

SWP:பொதுவாக மியூச்சுவல் ஃபண்டுகள் மிகப்பெரிய கார்ப்பஸ் இலக்குகளை அடைவதற்கான ஒரு முக்கிய அம்சமாக பார்க்கப்படுகிறது.  குறிப்பாக ஓய்வூதியதாரர்களுக்கு ஏற்ற குறிப்பிட்ட கால இடைவெளியில் சீரான பணம் எடுக்கும் திட்டமான சிஸ்டமேட்டிக் வித்டிராயல் பிளான் (SWP) என்பது சந்தை ஏற்ற இறக்கம் மற்றும் பணவீக்கத்தை தாண்டி, தொடர்ந்து வருமானத்தை உறுதி செய்கிறது. ஆக எஸ்.டபள்யூ.பி எப்படி வேலை செய்கிறது, முதலில் எஸ்.டபள்யூ.பி என்றால் என்ன? என்பதை தெளிவாக தெரிந்து கொள்ள வேண்டும். எஸ்.டபள்யூ.பி என்றால் என்ன? குறிப்பிட்ட கால இடைவெளியில் குறிப்பிட்ட பணம் எடுக்கும் திட்டம்…

Gold: மீண்டும் புதிய வரலாற்று உச்சத்தில் தங்கம்.. சாமானியர்களுக்கு குட் நியூஸ் கொடுத்த அமெரிக்கா!எப்படி?

Gold:தங்கம் விலையானது வரலாற்று உச்சத்தை எட்டி இருக்கிறதே. இது எப்படி குட் நியூஸ் ஆக இருக்க முடியும் என பலருக்கும் கேள்வி எழலாம். தற்போதைய சூழலில் தங்கம் விலையானது உச்சத்தை தொட்டிருந்தாலும், அது குறைவதற்கான சாத்தியக்கூறுகள் அதிகரித்திருப்பது நல்ல விஷயம் தானே. சர்வதேச அளவில் நிலவி வரும் நிச்சயமற்ற சூழலுக்கு மத்தியில், தங்கம் விலையானது அவ்வப்போது உச்சத்தை எட்டி வருகிறது. தொடர்ந்து தங்கத்தின் தேவையை அதிகரித்து வருகிறது. இந்த போக்கு மாறவே மாறாதா, விலை குறைவே குறையாதா என்ற எதிர்பார்ப்பானது இருந்து வருகிறது. இந்த…

Hero MotoCorp: உச்சத்தில் இருந்து 40% மேல் வீழ்ச்சி: இப்போது வாங்கி போடலாமா?

Hero MotoCorp: சர்வதேச அளவில் மிகப்பெரிய இருசக்கர வாகன உற்பத்தியாளரான ஹீரோ மோட்டோகார்ப், தற்போது கவனத்தில் கொள்ள வேண்டிய பங்குகளில் ஒன்றாக பார்க்கப்படுகிறது. தற்போதைய சூழலில் 3,537 ரூபாயாக காணப்படுகிறது. இது இப்பங்கின் 52 வார குறைந்தபட்ச விலையான 3,461.60 ரூபாய்க்கு அருகில் காணப்படுகிறது. இப்பங்கின் 52 வார உச்ச விலை 6,246.25 ரூபாயாகும். கடந்த 1 வருட வரலாற்றை பார்க்கும்போது இப்பங்கானது 22% மேலாக சரிந்து காணப்படுகிறது. இதே அதன் வரலாற்று உச்சத்தில் இருந்து பார்க்கும்போது 40% மேல் வீழ்ச்சி கண்டுள்ளது. தொடர்ந்து…