Investment: மாதம் ரூ.50,000 வேண்டுமா? தினசரி ரூ.100 இருந்தா போதும்? பாசிவ் வருமானத்திற்கு பலே ஐடியா!

Investment: நம்மில் ஒவ்வொருவரும் வேலை பார்த்து வருமானம் ஈட்டிக் கொண்டிருந்தாலும், பாசிவ் இன்கம் என கூறப்படும் இரண்டாவது வருமானத்தை அதிகரிக்க வேண்டும் என்று நினைப்பதுண்டு. ஆனால் அது எப்படி என்ற கேள்வியிலேயே பலரும் நின்று விடுவர். இன்னும் சிலர் வாங்கும் சம்பளமே 10,000 – 20,000 ரூபாய் தான். ஆக இதில் எப்படி பெரிய அளவில் முதலீடு செய்ய முடியும் என்ற கேள்வியை முன் வைக்கின்றனர். ஆனால் நீங்கள் குறைவான சம்பளம் வாங்கினாலும், சரியான முறையில் திட்டமிட்டு செயல்பட்டால், நல்லதொரு வருமானம் பார்க்க முடியும்.…

Gold: தங்கம் விலை குறைய வாய்ப்பு ரொம்ப கம்மி தான்..அப்ப இனி கனவில் தான் நினைக்கணுமா?

Gold:தங்கம் விலையானது குறையவே குறையாதா என்று கேள்வி எழுப்புவர்களுக்கு, தொடர்ந்து வாய்ப்பே இல்ல ராஜா என்பது தான் பதிலாக உள்ளது. ஜான் ஏறினால் முழம் சறுக்கிறது என்ற வரிகளுக்கு ஏற்ப, அவ்வப்போது சிறிய அளவில் குறைந்தாலும், மீண்டும் உச்சத்தை எட்டி நின்று விடுகிறது. சர்வதேச சந்தையில் கடும் ஏற்ற இறக்கத்தில் காணப்படும் தங்கமானது, வரவிருக்கும் பணவீக்க தரவுகளுக்கு மத்தியில் மீண்டும் ஏற்றம் காணலாம் என்ற அச்சம் எழுந்துள்ளது. விலை அதிகரிக்கலாம்! ஏனெனில் பாதுகாப்பு புகலிடமான தங்கத்தின் தேவையை இது ஊக்குவிக்கலாம். இது முதலீட்டு ரீதியாகவும்,…

அள்ள அள்ள குறையாத பணம் வேண்டுமா? இதோ சூப்பர் ஐடியா!

கஷ்டப்பட்டு சம்பாதிக்கும் தொகையை சிலர் பேராசையால் வீண் செலவு செய்வார்கள். ஆனால் கணிசமான கார்ப்பஸை உருவாக்கும் வரையில், அனாவசிய செலவுகளுக்கு இடமளிக்காமல் முதலீடு-க்கு முக்கியத்துவம் கொடுப்பது நல்லது. வரவு எட்டணா? செலவு பத்தணா? அதிகம் ரெண்டணா? கடைசியில் துந்தணா? என்ற பாடல் வரிகளைப் போலத்தான், இன்றைய காலகட்டத்தில் பலரின் நிதி நிலவரமும் இருக்கிறது. வரவுக்கு மீறிய செலவால், கடன் வலையில் சிக்கித் தவிக்கின்றனர். முதலீடுகள் பற்றி நினைப்பது கூட இல்லை. பிடித்த பொருட்களை நினைத்த நேரத்தில் கடனே ஆனாலும் பரவாயில்லை என வாங்கி விடுகின்றனர்.…