Stock market:கெளதம் அம்பானி, முகேஷ் அம்பானி உள்ளிட்ட பில்லியனர்களுக்கு செம அடி: பங்கு சந்தை வீழ்ச்சியால் கடும் இழப்பு!

Stock market: முகேஷ் அம்பானி மற்றும் கெளதம் அதானி உட்பட மொத்தம் ஏழு பணக்கார இந்தியர்களின் நிகர மதிப்பு, நடப்பு ஆண்டில் பங்குச் சந்தை வீழ்ச்சியால் கடும் சரிவைக் கண்டுள்ளது. இதில் அதானி குழுமத்தின் தலைவர் கெளதம் அதானியின் மதிப்பு மோசமான சரிவைக் கண்டுள்ளதாக தரவுகள் காட்டுகின்றன. கெளதம் அதானியின் நிகர மதிப்பானது 10 பில்லியன் டாலர்களுக்கும் அதிகமாக சரிவைக் கண்டுள்ளது. அதானியை தொடர்ந்து ஹெச்.சி.எல் டெக்னாலஜி நிறுவனத்தின் தலைவர் ஷிவ் நாடார், ஷபூர்ஜி பல்லோன்ஜி குழுமத்தின் ஷபூர் மிஸ்திரி, சன் பார்மாவின் திலீப் ஷாங்வி…