Reliance: குட் நியூஸ்.. இரண்டாவது முறையாக ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ்க்கு அப்கிரேட்.. ஏன்?

பங்குச் சந்தைகள் என்ன தான் வீழ்ச்சி கண்டாலும், வலுவானஅடிப்படைகளைக் கொண்ட சில முன்னணி நிறுவன பங்குகள் கவனத்தில் கொள்ள வேண்டியவையாக பார்க்கப்படுகின்றன.

அந்த வகையில் இன்று நாம் பார்க்க இருக்கும் பங்கு முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் (Reliance industries). இப்பங்குகுறித்து சர்வதேச தரகு நிறுவனமான மெக்குவாரி, அதன் மதிப்பீட்டை மேம்படுத்தியுள்ளதோடு,இலக்கு விலையையும் 15% அதிகரித்துள்ளது. 

தரகு நிறுவன அப்டேட்!

தரகு நிறுவன அறிக்கையில் நியூட்ரல் என இருந்த முந்தைய ரேட்டிங்கை,அவுட் பெர்பார்ம் என அப்கிரேட் செய்துள்ளது. அதோடு இலக்கு விலையை 1,300 ரூபாயிலிருந்து,1,500 ரூபாயாக அதிகரித்துள்ளது. இது தற்போதைய சந்தை விலையில் இருந்து 24% அதிகமாகும்.தொடர்ந்து நிஃப்டி 50 குறியீட்டில் டாப் கெயினராக இருந்து வரும் இப்பங்கு, பல்வேறுசாதகமான காரணிகளுக்கு மத்தியில் அப்கிரேட் செய்யப்பட்டுள்ளது.  

வளர்ச்சி மேம்படும்!

ஆயில் முதல் டெலிகாம், சில்லறை வர்த்தகம் என தொட்டதெல்லாம்பொன்னாக்கிய ஜாம்பவான் நிறுவனம், அடுத்த 6 முதல் 12 மாதங்களில் இன்னும் நேர்மறையானவளர்ச்சியை காணலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. தொடர்ந்து அதன் வளர்ச்சி மேம்பட்டுவரும் சூழலில், 2025 – 2027ம் நிதியாண்டுகளில் வருமானம் 15- 16% வளர்ச்சி காணலாம் எனதரகு நிறுவன அறிக்கையில் சுட்டிக் காட்டியுள்ளது.

மேலும் மூன்று முக்கிய அம்சங்களைசுட்டிக் காட்டியுள்ள நிறுவனம், சிறப்பான வருமானம், ஜியோ பட்டியல், எரிசக்தி பிரிவில்ஏற்பட்டு வரும் முன்னேற்றம் என பலவும் ரிலையன்ஸ் நிறுவனத்தின் வளர்ச்சியை மேம்படுத்தும். மந்த நிலை முடிவுக்கு வரும்!சர்வதேச தரகு நிறுவனத்தின் அப்கிரேடிற்கு மத்தியில், கோட்டக்தரகு நிறுவனமும் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனத்தின் ரேட்டிங்கை சேர்க்கலாம் (ADD)என்பதில் இருந்து வாங்கலாம் (BUY) என தரம் உயர்த்தியுள்ளது. இலக்கு விலையை 1,400 ரூபாயாககொடுத்துள்ளது.

சமீபத்திய காலமாக சில்லறை வர்த்தக பிரிவில் இருந்து வரும் மெதுவாக போக்குசற்று வளர்ச்சியில் பாதிப்பை ஏற்படுத்தினாலும், தொடர்ந்து அது மீண்டு வரும். மெதுவானசுழற்சி காலம் விரைவில் முடிவுக்கு வரும். வளர்ச்சி அதிகரிக்கும். ஆக தேவை அதிகரிக்கும் போது,விற்பனையும் அதிகரிக்கும் என கூறியுள்ளது.  

நிபுணர்கள் கருத்து?

ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவன பங்கு குறித்து 38 நிபுணர்கள்தங்கள் கணிப்புகளை கொடுத்துள்ளனர். அதில் 35 பேர் வாங்கலாம் என்றும், 3 பேர் விற்பனைசெய்யலாம் என்றும் ரேட்டிங் கொடுத்துள்ளனர். இது சந்தையில் என்ன  தான் வீழ்ச்சி இருந்து வந்தாலும், முதலீட்டாளர்களின்நம்பிக்கையை காட்டுகிறது.  பங்கு விலை நிலவரம்!ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவன பங்கு விலையானது 2% மேல் அதிகரித்து,1,240.60 ரூபாயாக காணப்படுகின்றது.

இந்த சூழலில் இப்பங்கின் 52 வார உச்ச விலை 1608ரூபாயாகும். 52 வார குறைந்தபட்ச விலை 1,156 ரூபாயாகும். இதற்கிடையில் இந்த நிறுவனத்தின்சந்தை மூலதனம் 1,679,367  கோடி ரூபாயாக காணப்படுகிறது.இப்பங்கின் பீட்டா விகிதம் 1.17 ஆக காணப்படுகிறது. இது இப்பங்கில் இருந்து வரும் அதிகஏற்ற இறக்கத்தை காட்டுகிறது. எனினும் சிறந்த அடிப்படைகளைக் கொண்ட இப்பங்கானது, வாங்குவதற்குஉகந்த ஒன்றாக பார்க்கப்படுகிறது. டெக்னிக்கலாக பார்க்கும்போது இப்பங்கானது அதிகரிக்கலாம்எனும் விதமாக காணப்படுகிறது.

பல முக்கிய குறிகாட்டிகளும் பங்கு விலைக்கு ஆதரவாகவே காணப்படுகின்றன. மேலும் கடந்த 1 வருடத்தில் 16% மேல் சரிவைக் கண்டுள்ள இப்பங்கை, குறைந்த விலையில் வாங்கஇது நல்ல வாய்ப்பாகவும் பார்க்கப்படுகிறது. தொடர்ந்து காணப்படும் வலுவான வால்யூமும். இப்பங்கு மேற்கொண்டு அதிகரிக்கலாம் என்பதையே காட்டுகிறது.வலுவான நிதி நிலைகள், டெக்னிக்கலாகவும் வலுவான போக்கு, நிபுணர்களின்சாதகமான கணிப்பு உள்ளிட்டவற்றின் அடிப்படையில், சரியான ஆலோசனையுடன் இப்பங்கை போர்ட்ஃபோலியோவில்சேர்க்கலாம்.

Disclaimer: All the above articles and news are published for informational purposes. It isimportant to plan with the advice of proper experts and not to make finaldecisions regarding investment or savings based on this. The management is notresponsible for any such planning based on this. 

முதலீடு செய்வதற்கு முன்பு செபி பதிவு முதலீட்டு ஆலோசகர்களிடம் கலந்து ஆலோசித்த பின்னரே இறுதி முடிவு எடுக்க வேண்டும். அதுவே லாபகரமான முதலீட்டுக்கு உதவும்

Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *