share market updates:இந்திய பங்குச் சந்தைகள் கடுமையான ஏற்ற இறக்கத்தை கண்டு வரும் சூழலில், இன்னும் என்னவெல்லாம் நடக்குமோ என்ற அச்சம் முதலீட்டாளர்கள் மத்தியில் எழுந்துள்ளது. குறிப்பாக பங்குச் சந்தையில் இன்னும் சிறிது காலத்திற்கு முதலீடுகளை தள்ளிப்போடலாமா என்ற கவலையும் எழுந்துள்ளது.
ரணகளம் தான்?
அமெரிக்க அதிபராக இரண்டாவது முறையாக பதவியேற்றத்தில் இருந்தே, அதிபர் டிரம்ப் பல்வேறு அதிரடியான அறிவிப்புகளை கொடுத்து வருகிறார். குறிப்பாக அமெரிக்காவின் பொருளாதாரத்தை மேம்படுத்துவோம் என்ற பெயரில், அண்டை நாடுகளுக்கு வரி அதிகரிப்பை செய்து வருகிறார். இதில் வரவிருக்கும் ஏப்ரல் 2 முதல் இந்தியாவுக்கும் கூடுதல் வரி விதிப்போம் என்பது கவலையை எழுப்பயுள்ளது. ஒரு புறம் இந்தியாவின் ஏற்றுமதியில் பாதிப்பு ஏற்படும், இதனால் வர்த்தக பற்றாக்குறை விரிவடையலாம் எனில், மறுபுறம் ஏற்றுமதி நிறுவனங்கள் நிதி நிலை பற்றிய கவலையும் அதிகரித்துள்ளது. அப்படி வருமானம் சரியும்பட்சத்தில் அவற்றின் பங்கு விலையும் சரியலாமோ என்ற அச்சமும் இருந்து வருகிறது. மொத்தத்தில் சங்கிலித் தொடராக ஒவ்வொரு துறையிலும் என்ன பிரச்சனை வரப்போகிறதோ என்ற அச்சம் எழுந்துள்ளது. இது பங்குச் சந்தையில் இன்னும் ரணகளத்தை உருவாக்குமோ என்ற அச்சமும் முதலீட்டாளர்கள் மத்தியில் காணப்படுகிறது.
வரிக்கு வரி
அமெரிக்காவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு அண்டை நாடுகள் விதிக்கும் அதே வரி விகிதத்தை, அதே அளவில் தங்கள் நாட்டிற்கு இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கும் விதிகப்படும் என டிரம்ப் அதிரடியான அறிவிப்பை சமீபத்தில் வெளியிட்டார். அதில் பல நாடுகள் அமெரிக்காவுக்கு எதிராக வரிகளை விதித்து வருகின்றன. அதையே எதிராக அந்த நாடுகளுக்கு பயன்படுத்த வேண்டும் என சாடினார்.
இந்தியா அதிக வரி விதிக்கிறது?
டிரம்ப் முதல் முறையாக அதிபராக இருந்தபோதில் இருந்தே, இந்தியா அதிக வரி விதிப்பதாக தொடர்ந்து குற்றம் சாட்டி வந்தார். தற்போது அதை நேரடியாக சொல்லாவிட்டாலும் மறைமுக சொல்லி விட்டார் எனலாம். வரும் ஏப்ரல் 2 முதல் இந்தியா மீது வரிக்கு வரி விதிக்கப்படும் என கூறியிருப்பது, ஏற்றுமதியாளர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
டிரம்பின் உரை சொல்வதென்ன?
அமெரிக்க நாடாளுமன்றத்தில் பேசிய டிரம்ப், பல தசாப்தங்களாக சில நாடுகள் நமக்கு எதிராகக் கடும் வரியை விதிக்கின்றன. இதையே அவர்களுக்கு எதிராக நாம் பயன்படுத்த வேண்டும். ஐரோப்பிய ஒன்றியம், சீனா, பிரேசில், இந்தியா, மெக்சிகோ, கனடா உள்ளிட்ட நாடுகள் எவ்வளவு வரி விதிக்கின்றன தெரியுமா என்ற கேள்வியையும் எழுப்பினார். மேலும் இது நியாயமற்ற ஒன்று. இந்தியா, அமெரிக்க வாகனங்களுக்கு 100% மேல் வரி விதித்து வருகிறது. இது நியாமே இல்லை என்பதையும் கூறியிருந்தார்.
டிரம்பின் இந்த பேச்சானது பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தி வந்த நிலையில், அது பங்கு சந்தையிலும் கடும் தாக்கத்தை ஏற்படுத்தி வருகின்றது. ஒரு புறம் பொருளாதாரம் என்னவாகுமோ என்ற அச்சத்தில் உள்ள உலக நாடுகள், இது வர்த்தக போருக்கு வழிவகுத்து விடுமோ என்ற கவலையிலும் ஆழ்ந்துள்ளன. ஏற்கனவே கனடா, மெக்சிகோ, சீனா உள்ளிட்ட நாடுகளுக்கு வரி அதிகரிப்பு செய்துள்ள டிரம்ப், ஏப்ரல் 2-ல் இருந்து கூறியதை போல், இந்தியாவுக்கும் வரி அதிகரிப்பு செய்தால் என்ன நடக்கும் என்ற கேள்வியும் பல தரப்பினர் இடைடே எழுந்துள்ளது.
எச்சரிக்கையாக இருக்கணும்?
அமெரிக்காவின் இந்த நடவடிக்கையால் சில இடையூறுகள் வரலாம். ஆனால் அதை பற்றி கவலையில்லை. அது அதிக நாள் நீட்டிக்காது. அமெரிக்காவின் வர்த்தக கூட்டாளிகளுக்கு ஏற்ற வகையில் வரி விதிப்பு இருக்கும் என்பதையும் தீர்க்கமாக கூறியிருந்தது நினைவில் கொள்ளத் தக்கது. ஏற்கனவே பங்குச் சந்தைகள் இதற்கு எதிராக வீழ்ச்சி காணத் தொடங்கியுள்ள நிலையில், இது இன்னும் எங்கு சென்று முடியுமோ என்ற அச்சத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
எது எப்படியோ முதலீட்டாளர்கள் மிக கவனமுடன் முதலீடுகளை கையாளுவது சிறப்பு. முடிந்த மட்டில் சிறு முதலீட்டாளர்கள் பங்குச் சந்தை போன்ற ஆபத்தான முதலீடுகளை தவிர்த்து, பாதுகாப்பான திட்டங்களில் செய்யலாம்.
Disclaimer: All the above articles and news are published for informational purposes. It is important to plan with the advice of proper experts and not to make final decisions regarding investment or savings based on this. The management is not responsible for any such planning based on this.
முதலீடு செய்வதற்கு முன்பு செபி பதிவு முதலீட்டு ஆலோசகர்களிடம் கலந்து ஆலோசித்த பின்னரே இறுதி முடிவு எடுக்க வேண்டும். அதுவே லாபகரமான முதலீட்டுக்கு உதவும்.