சர்வதேச அளவிலான பில்லியனர்கள் பட்டியலை தொடர்ந்து ஹுருன் அமைப்பு வெளியிட்டு வருகின்றது. இந்த அறிக்கையில் தொடர்ந்து டெஸ்லா நிறுவனத்தின் தலைவர் எலான் மஸ்க் மீண்டும் 420 பில்லியன் டாலர்கள் சொத்து மதிப்புடன் முதலிடம் பெற்றுள்ளார். இது 82% அளவுக்கு அதிகரித்துள்ளது. கடந்த 5 ஆண்டுகளில் 4வது முறையாக எலான் மஸ்க் தொடர்ந்து முதலிடத்தில் இருந்து வருகிறார். இரண்டாவது இடத்தில் அமேசான் நிறுவனம் ஜெஃப் பெசோஸ் 266 பில்லியன் டாலர்களுடனும், மெட்டா நிறுவனம் மார்க் ஜூக்கர்பெர்க் 242 பில்லியன் டாலர்களுடன் மூன்றாவது இடத்திலும் இடம் பெற்றுள்ளனர்.
அம்பானி தான் பர்ஸ்ட்!
ரிலையன்ஸ் இண்டன்ஸ்ட்ரீஸ் நிறுவனத்தின் தலைவர் முகேஷ் அம்பானி மீண்டும், இந்தியாவின் மிகப்பெரிய பணக்காரர் ஆக இடம் பிடித்துள்ளார். எனினும் கடந்த 1 வருடத்தில் அவரின் சொத்து மதிப்பு 1 லட்சம் கோடி ரூபாய் சரிவைக் கண்டுள்ளது. இது மிகப்பெரிய அளவில் அதிகரித்துள்ள கடன் விகிதத்தை அடுத்து, சொத்து மதிப்பு குறைந்துள்ளது. எப்படி இருப்பினும் ஆசியாவின் பணக்காரர்கள் பட்டியலில் முகேஷ் அம்பானியே 8.6 லட்சம் கோடி ரூபாயுடன் முதலிடம் பெற்றுள்ளார். எனினும் சர்வதேச பணக்காரர்கள் பட்டியலில் முதல் 10 இடங்களில் இருந்து வெளியேறியுள்ளார்.
இரண்டாவது இடத்தில் கெளதம் அதானி இடம் பெற்றுள்ளார். இவரின் சொத்து மதிப்பு கடந்த ஆண்டை காட்டிலும் 13% அதிகரித்து, 8.4 லட்சம் கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது. இவர் சர்வதேச பணக்காரர்கள் பட்டியலில் 18வது இடத்தில் உள்ளார்.
ஹெச்.சி.எல் டெக் நிறுவனத்தின் ரோஷினி நாடார் உலகின் ஐந்தாவது பணக்கார பெண்ணாகவும் இருக்கிறார். இவரின் சொத்து மதிப்பு 3.5 லட்சம் கோடி ரூபாயாகும். உலகின் சிறந்த 10 பணக்காரர்கள் பட்டியலில் இடம் பிடித்த முதல் இந்திய பெண் தொழிலதிபர் ஆவார்.
இந்தியாவின் டாப் 10 பட்டியல்!
1. முகேஷ் அம்பானி – ரூ.8.6 லட்சம் கோடி
2. கௌதம் அதானி – ரூ.8.4 லட்சம் கோடி
3. ரோஷ்னி நாடார் – ரூ.3.5 லட்சம் கோடி
4. திலீப் சங்க்வி – ரூ.2.5 லட்சம் கோடி
5. அசிம் பிரேம்ஜி – ரூ.2.2 லட்சம் கோடி
6. குமார் மங்கலம் பிர்லா – ரூ.2 லட்சம் கோடி
7. சைரஸ் பூனாவாலா – ரூ.2 லட்சம் கோடி
8. நீரஜ் பஜாஜ் – ரூ.1.6 லட்சம் கோடி
9. ரவி ஜெய்பூரியா – ரூ.1.4 லட்சம் கோடி
10. ராதாகிஷன் தமானி – ரூ.1.4 லட்சம் கோடி
Disclaimer: All the above articles and news are published for informational purposes. It is important to plan with the advice of proper experts and not to make final decisions regarding investment or savings based on this. The management is not responsible for any such planning based on this.
மேற்கண்ட செய்திகள் தகவல் நோக்கத்திற்காக மட்டுமே பகிரப்படுகிறது. இதன் அடிப்படையில் முதலீடு செய்வதை தவிர்க்க வேண்டும். முதலீடு செய்வதற்கு முன்பு செபி பதிவு பெற்ற முதலீட்டு ஆலோசகர்களிடம் கலந்து ஆலோசித்த பின்னரே இறுதி முடிவு எடுக்க வேண்டும். அதுவே லாபகரமான முதலீட்டுக்கு உதவும்.