IT stocks: இந்தியாவின் முன்னணி ஐடி நிறுவனங்களாக இன்ஃபோசிஸ், விப்ரோ, டிசிஎஸ் உள்ளிட்ட ஐடி பங்குகள் வீழ்ச்சி காண வாய்ப்பிருப்பதாக எதிர்பார்க்கப்படுகிறது. இது சர்வதேச ஐடி நிறுவனமான ஆக்சென்ச்சரின் இரண்டாவது காலாண்டு முடிவானது பலவீனமாக வந்த நிலையில், அப்பங்கானது 10% மேல் நியூயார்க் சந்தையில் கடும் வீழ்ச்சியை சந்தித்துள்ளது. இதன் பாதிப்பு இந்திய நிறுவனங்களிலும் இருக்கும். இந்திய நிறுவனங்களின் வருவாய் வீழ்ச்சி காணும் என அஞ்சப்படுகிறது. இது அவற்றின் பங்கு விலையிலும் சரிவைக் காண காரணமாக அமையலாம்.
எச்சரிக்கை மணியா?
இந்திய ஐடி நிறுவனங்களுக்கான ஒரு அளவுகோலாக ஆக்சென்ச்சர் பார்க்கப்படுகிறது. ஆக அவற்றின் செயல்திறன் குறித்த ஒரு ஐடியாவை கொடுக்கிறது. இன்னும் தெளிவாக சொல்ல வேண்டுமானால் ஆக்சென்ச்சரின் வருவாய் அறிக்கை, இந்திய ஐடி நிறுவனங்களுக்கு எச்சரிக்கை மணியாக பார்க்கப்படுகிறது. இந்திய ஐடி நிறுவனங்கள் முக்கியமாக ஏற்றுமதியை நம்பியுள்ளன.
சர்வதேச சந்தையில் பொருளாதாரத்தில் நிலவி வரும் நிச்சயமற்ற சூழல், ஐடி துறையில் தேவையை குறைக்கலாம். நிறுவனங்களின் செலவினங்களை குறைக்க வழிவகுக்கலாம். இது இந்திய ஐடி நிறுவனங்களுக்கு வாய்ப்பை குறைக்கலாம். ஒப்பந்தங்கள் மதிப்பு குறையலாம்.
நம்பிக்கை!
சர்வதேச தரகு நிறுவனமான சிட்டி, இந்திய ஐடி துறையின் ஒட்டுமொத்த போக்கு தற்போதும் எச்சரிக்கையாகவே இருக்க தூண்டுகிறது. ரூபாய் மதிப்பு சரிவைக் கண்டு இருந்த போதிலும், ஐடி நிறுவனங்கள் மார்ஜினை மேம்படுத்துவதில் சவால்களை எதிர்கொண்டுள்ளன. இந்த போக்கு இன்னும் சிறிது காலத்திற்கு தொடரலாம் என அஞ்சப்படுகிறது. குறிப்பாக ஹெச்.சி.எல் டெக்னாலஜி மற்றும் இன்ஃபோசிஸ், எம்பாஸிஸ் உள்ளிட்ட நிறுவனங்கள் மீது சாதகமான ரேட்டிங்கை கொடுத்துள்ளது. இது முதலீட்டாளர்களுக்கு ஒரு நம்பிக்கையை கொடுத்துள்ளது.
நுவாமா தரகு நிறுவனம் ஐடி துறை நடுத்தர மற்றும் நீண்ட காலத்தில் ஏற்றம் காணலாம். எனினும் குறுகிய காலத்தில் நிச்சயமற்ற நிலையிலேயே இருக்கும். ஆக ஐடி பங்குகளும் ஏற்ற இறக்கத்தில் இருக்கலாம். ஆக முதலீட்டாளர்கள் கவனமுடன் செயல்படுவது நல்லது.
சி.எல்.எஸ்.ஏ தரகு நிறுவனம் டிசிஎஸ், இன்ஃபோசிஸ், விப்ரோ மற்றும் டெக் மஹிந்திரா உள்ளிட்ட பங்குகள் வளர்ச்சி பாதைக்கு திரும்பி கொண்டுள்ளன. ஆக அவற்றின் பங்குகளும் கவனத்தில் கொள்ள வேண்டியவையாக பார்க்கப்படுகிறது.