Investment: மாதம் ரூ.50,000 வேண்டுமா? தினசரி ரூ.100 இருந்தா போதும்? பாசிவ் வருமானத்திற்கு பலே ஐடியா!

Investment: நம்மில் ஒவ்வொருவரும் வேலை பார்த்து வருமானம் ஈட்டிக் கொண்டிருந்தாலும், பாசிவ் இன்கம் என கூறப்படும் இரண்டாவது வருமானத்தை அதிகரிக்க வேண்டும் என்று நினைப்பதுண்டு. ஆனால் அது எப்படி என்ற கேள்வியிலேயே பலரும் நின்று விடுவர். இன்னும் சிலர் வாங்கும் சம்பளமே 10,000 – 20,000 ரூபாய் தான். ஆக இதில் எப்படி பெரிய அளவில் முதலீடு செய்ய முடியும் என்ற கேள்வியை முன் வைக்கின்றனர். ஆனால் நீங்கள் குறைவான சம்பளம் வாங்கினாலும், சரியான முறையில் திட்டமிட்டு செயல்பட்டால், நல்லதொரு வருமானம் பார்க்க முடியும்.

பாசிவ் இன்கம்?

ஒருவரின் உழைப்பு இல்லாமல் கிடைக்க கூடிய கூடுதல் வருமானம் பாசிவ் இன்கம் என கூறப்படுகிறது. அதாவது அவரவர் கஷ்டப்பட்டு சம்பாதித்த பணத்தை, அவருக்காக பணிபுரிய வைப்பது.  உதாரணத்திற்கு உங்களிடம் தேவைக்கு அதிகமாக இருக்கும் ஒரு இடத்தை வாடகைக்கு விட்டு சம்பாதிப்பது. வீட்டை வாடகைக்கு விட்டு சம்பாதிப்பது என பலவும் அடங்கும். எனினும் மேற்கண்ட வாடகை வருமானம் பலருக்கும் சாத்தியமில்லாத ஒன்று. ஆனால் முதலீட்டின் மூலம் பாசிவ் வருமானத்தை ஏற்படுத்திக் கொள்ள முடியும். இதன் மூலம் ஓய்வு காலத்தில் மாத மாதம் வருமானம் கிடைக்கும் வகையில் கூட வழிவகை செய்து கொள்ள முடியும்.

எஸ்ஐபி (SIP) பெஸ்ட்!

வயதான காலத்தில் மாத மாதம் பெரிய வருமானம் கிடைக்க, வேலைக்கு செல்லும் காலத்தில் இருந்தே சரியாக திட்டமிட்டு செயல்பட வேண்டும். அவ்வாறு திட்டமிட்டு செய்தால் மிகப்பெரிய கார்ப்பஸ் தொகையை அடைய முடியும்.

பொதுவாக பெரிய அளவிலான கார்ப்பஸை, சிறிய முதலீட்டின் மூலம் எட்ட எஸ்ஐபி (SIP) பெஸ்ட் ஆப்ஷன் எனலாம். அதன் மூலம் மிகப்பெரிய கார்ப்பஸ்-ஐ கூட உருவாக்க முடியும். சிலர் மாதம் 10,000 – 20,000 ரூபாய் போட்டால், கோடிக்கணக்கில் கார்ப்பஸை உருவாக்க முடியும் என கூறுவதை பார்த்திருக்கலாம். ஆனால் வாங்கும் சம்பளமே அவ்வளவு தான் எனும்போது என்ன செய்ய முடியும் என்ற கேள்வி பலருக்கும் இருக்கும். ஆனால் சிறிய அளவில் முதலீட்டை தொடங்கினால் கூட, அதன் மூலம் பெரிய அளவில் வருமானம் ஈட்ட முடியும்.   

தினசரி ரூ.100 முதலீடு!

தினசரி 100 ரூபாய் எனும் அளவில், எஸ்ஐபி-ல் மாதம் 3000 ரூபாய் முதலீடு என்பது சற்று ஏற்றுக் கொள்ளக் கூடியதாக இருக்கும்.  பலரும் எஸ்ஐபி முதலீடும், மற்ற முதலீடுகளை போல் தான் என நினைக்கின்றனர். ஆனால் எஸ்ஐபி-ஐ சரியாக செயல்படுத்தும் பட்சத்தில், அதன் மூலம் நினைத்து கூட பார்க்க முடியாத கார்ப்பஸ் இலக்கை அடைய முடியும் என்பதை புரிந்து கொள்ள வேண்டும்.

கையேந்த விடாது?

ஒரு குடும்பத்தில் இரு குழந்தைகள் இருக்கிறார்கள் என முதலீடு செய்யும் நபர்கள், மூன்றாவதாகவும் ஒரு குழந்தை இருப்பதாக நினைத்து முதலீட்டை செய்ய வேண்டும்.  குழந்தைகளுக்கு எப்படி தொடர்ந்து எதையும் யோசிக்காமல் செலவு செய்வோமோ, அப்படி எஸ்.ஐ.பி-ம் தொடர வேண்டும். உங்கள் குழந்தை வளர்ந்து ஒரு வேலைக்கு செல்லும் வரையில் தான், தந்தையின் உதவி தேவை. அதே குழந்தை வளர்ந்த பின் பெற்றோரை பார்ப்பார்களாக என்பது பெரிய கேள்வி தான். ஆனால் நீங்கள் மூன்றாவது குழந்தையாக நினைத்து வளர்த்த எஸ்.ஐ.பி உங்களை கைவிடாது.  அது யாரிடமும் உங்களை கையேந்த விடாது.

கெட்ட பழக்கம்

இன்றைய காலகட்டத்தில் பலருக்கும் இருக்கும் கெட்ட பழக்கம், முதலீடு செய்ய வேண்டும் என நினைப்பார்கள். முதலீட்டு ஆலோசகர்களை கூட அணுகுவர். தேவையான விவரங்களை தெரிந்து கொள்வர். ஆனால் முதலீட்டை மட்டும் தொடங்க மாட்டார்கள். மாறாக காலம் மட்டுமே கடந்து கொண்டு இருக்கும். ஆனால் காலத்தோடு உங்களுக்கான சுமையும் அதிகரித்து கொண்டே செல்வதை புரிந்து கொண்டு, உடனடியாக முதலீட்டைத் தொடங்குவது பயனுள்ள ஒன்றாக இருக்கும்.இன்னும் சிலர் செய்யும் முதலீட்டை அதிக லாபத்திற்கு ஆசைப்பட்டு தவறான திட்டங்களில் முதலீடு செய்வார்கள்.கடைசியில் மொத்தத்தையும் இழந்து நிர்கதியாய் நிற்பார்கள்.  ஆக இதுவும் கவனத்தில் கொண்டு சரியான திட்டங்களில் முதலீடு செய்ய வேண்டும்.

எதில் முதலீடு?

மாதம் மாதம் முதலீடு செய்ய திட்டமிடும் ஒருவர், அதை சரியான மியூச்சுவல் ஃபண்டுகளில் முதலீடு செய்யலாம்.  மாதம் 3000 ரூபாய் என்பதோடு நிறுத்தாமல், சம்பளம் அதிகரிக்க அதிகரிக்க வருடத்திற்கு வருடம் 10% முதலீட்டை அதிகரிக்க வேண்டும். இது மேற்கொண்டு இன்னும் கார்ப்பஸ் விகிதத்தை அதிகரிக்க உதவும். ஒருவர் தனது 25 வயதில் முதலீடு செய்ய தொடங்குகிறார்.

ஸ்டெப் அப் இல்லாமல் கணக்கீடு:

முதலீடு – ரூ.3000

முதலீட்டு காலம் – 35 ஆண்டுகள்

வருமானம் எதிர்பார்ப்பு – 12%

மொத்த முதலீட்டு தொகை – ரூ.12,60,000

முதிர்வு தொகை – ரூ.1,65,32,493

ஸ்டெப் 10% செய்வதாக கணக்கிட்டால்:

முதலீடு – ரூ.3000

முதலீட்டு காலம் – 35 ஆண்டுகள்

வருமானம் எதிர்பார்ப்பு – 12%

ஸ்டெப் அப் – 10%

மொத்த முதலீட்டு தொகை – ரூ.97,56,877

முதிர்வு தொகை – ரூ.4,72,94,480

மேற்கண்ட எஸ்ஐபி திட்டத்தை சரியாக 35 வருடத்திற்கு தொடர்ந்தால், 4.7 கோடி ரூபாய் கார்ப்பஸ் ஆக இருக்கலாம். ஸ்டெப் அப் செய்யாவிட்டால் கூட 1.6 கோடி கார்ப்பஸ் இருக்கும்.  

மாத வருமானம் எப்படி?

மேற்கண்ட 4.7 கோடி ரூபாய் கார்ப்பஸில் 3 கோடி ரூபாயை எஸ்.டபள்யூ.பி திட்டத்தில் 12% வருமானம் கிடைப்பதாக கணக்கிட்டால், மாதம் 50,000 ஓய்வூதியத்துடன், 8 கோடி ரூபாய்க்கு மேல் கார்ப்பஸும் வளர்ந்திருக்கும். ஆக இளமை காலத்தில் சரியான திட்டமிடலுடன், தொடர்ச்சியாக முதலீடு செய்வதன் மூலம் ஓய்வு காலத்தை நிதி ரீதியாக யாரையும் சாராமல்,  எந்த பிரச்சனையும் இல்லாமல் எளிதாக கடக்க முடியும். அப்படி இல்லாவிடில் மூத்த குடிமக்களுக்கான டெபாசிட் திட்டங்களில் முதலீடு செய்தால் கூட, பெரிய அளவில் வட்டி வருமானம் பெற முடியும்.

Disclaimer: All the above articles and news are published for informational purposes. It is important to plan with the advice of proper experts and not to make final decisions regarding investment or savings based on this. The management is not responsible for any such planning based on this.

முதலீடு செய்வதற்கு முன்பு செபி பதிவு முதலீட்டு ஆலோசகர்களிடம் கலந்து ஆலோசித்த பின்னரே இறுதி முடிவு எடுக்க வேண்டும். அதுவே லாபகரமான முதலீட்டுக்கு உதவும். 

Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *