தினசரிவெறும் 7 ரூபாய் இருந்தால் கூட ஓரளவு பென்ஷன் பெறமுடியும் என்றால் நம்ப முடிகிறதா, ஆனால் இது உண்மை தான். மத்திய அரசின் இந்ததிட்டமானது தனியார் ஊழியர்கள் மத்தியில் மிக பெரிய நம்பிக்கையைகொடுத்துள்ளது எனலாம்.
Investment: பொதுவாக நம்மவர்களுக்கு இன்றைய காலத்தில் கஷ்டப்பட்டாலும் பரவாயில்லை. வயதான காலகட்டத்தில் ஆவது நிம்மதியாக இருக்க வேண்டும். அப்படி இருக்க எந்த ரிஸ்க்கும் இல்லாத திட்டங்களில் முதலீடு செய்ய வேண்டும் என நினைப்பர். அதிலும் குறைந்த வருமானம் உடைய சாமானிய மக்கள் மத்தியில் இக்கேள்வி அதிக அளவில் இருக்கும்.
சம்பாதிப்பதே குறைவு. அதிலும் கொஞ்சம் கொஞ்சமாக சேமித்து, அதை முதலீடு செய்யும் போதுஒரு முறைக்கு பல முறை யோசிக்க வேண்டும் இல்லையா, அப்படியானவர்களுக்கு மத்திய அரசின்ஓய்வூதிய திட்டம் நிச்சயம் வரப்பிரசாதம் தான். அதுவும் தினசரிவெறும் 7 ரூபாய் இருந்தால் கூட ஓரளவு பென்ஷன் பெறமுடியும் என்றால் நம்ப முடிகிறதா, ஆனால் இது உண்மை தான். மத்திய அரசின் இந்ததிட்டமானது தனியார் ஊழியர்கள் மத்தியில் மிக பெரிய நம்பிக்கையைகொடுத்துள்ளது எனலாம்.
யாரெல்லாம்இணையலாம்?
இன்று பார்க்கவிருக்கும் திட்டம் அடல் பென்ஷன் யோஜனா. இந்த திட்டத்தின் கீழ், 18 – 40 வயதுவரையிலான எந்தவொரு இந்திய குடிமகனும் ஒரு கணக்கைத் தொடங்கிக்கொள்ளலாம். இந்தத் திட்டத்தில் வாடிக்கையாளர் தான் கணக்கு வைத்துள்ளவங்கி கிளை அல்லது அஞ்சலகத்தில் கணக்கைத் தொடங்கிக் கொள்ளலாம். இந்தஓய்வூதிய திட்டத்தின் கீழ் இணைந்த சந்தாதாரர்தனது கணக்கில் அளிக்கும் பங்களிப்பு அடிப்படையில் 60 வயதிலிருந்து ஓய்வூதியம் பெறலாம். இதுஅவரவர் பங்களிப்பின் அடிப்படையில் மாதத்திற்கு குறைந்தபட்சம் 1000 ரூபாய் முதல்5,000 ரூபாய் வரையில் உத்தரவாதமான ஓய்வூதியம் பெறலாம். ஒரு வேளை சந்தாதாரர்துரதிஷ்டவசமாக இறந்துவிட்டாலும்கூட, நாமினி பயனடைய முடியும்.
எவ்வளவு பென்ஷன்?
உதாரணத்திற்குஒரு நாளைக்கு 7 ரூபாய் அல்லதுமாதத்திற்கு 210 ரூபாய் முதலீடு செய்கிறீர்கள் என வைத்துக் கொள்வோம். 18 வயதில் இருந்து முதலீடு செய்கிறீர்கள்என்றால், பணம் செலுத்தவேண்டிய வருடம் 42 வருடங்களாகும். இதன் மூலம் உங்கள்61 வயதில் இருந்து மாதம் தோறும் 5,000 ரூபாய் ஓய்வூதியம் பெறுவீர்கள். ஆக மொத்தம் வருடத்திற்கு60,000 ரூபாய் ஓய்வூதியமாக பெறலாம்.என்னால் மாதம்210 ரூபாய் எல்லாம் செலுத்த முடியாது, அதைவிட குறைவாக முதலீடு செய்யலாமா, என்றாலும் அதற்கும் இத்திட்டத்தில் சாத்தியம் உண்டு. மாதம் 42 ரூபாய் செலுத்தினால், மாதம் 1000 ரூபாயும், மாதம் 84 ரூபாய் செலுத்தினால் 2,000 ரூபாயும், மாதம் 126 ரூபாய் செலுத்தினால் மாதம் 3000 ரூபாயும், மாதம் 168 ரூபாய் செலுத்தினால், மாதம் 4,000 ரூபாயும் உங்களுக்கு ஓய்வூதியமாக பெற்றுக் கொள்ள முடியும்.
இதை மனதில்வைத்துக் கொள்ளுங்கள்!
இந்த ஓய்வூதியதிட்டத்தை பொறுத்தவரையில் இளம் வயதிலேயே முதலீடுசெய்ய தொடங்க வேண்டும். அப்போது தான் மாத மாத செலுத்தும் தொகை குறைவாக இருக்கும். ஒருவேளை 30 வயது வரையில் நீங்கள் அதை பற்றி தெரிந்திருக்கவில்லை அல்லது முதலீடு செய்ய வில்லை எனில், 30 வயது எனும்போது நீங்கள் 30வருடம் பணம் செலுத்த வேண்டியிருக்கும்.அப்போது நீங்கள் மாதம்116 ரூபாய் செலுத்தினால், மாதம் 1000 ரூபாய் பென்ஷன் பெறலாம்.
இதேமாதம் 5000 ரூபாய் பெற 577 ரூபாய் முதலீடு செய்ய வேண்டும். இதே 40 வயது எனில் 1,454 ரூபாய்செலுத்த வேண்டியிருக்கும். அப்போது தான் உங்கள் 60 வயதுக்குபிறகு ஓரளவுக்கு ஓய்வூதியம்கிடைக்கும்.
யாருக்கு பொருந்தும்?
ஆக நீங்கள் பெற நினைக்கும் ஓய்வூதியத்திற்குஏற்ப, ஒவ்வொரு மாதமும் பணம் செலுத்த வேண்டியிருக்கும்.எப்போது முதல் முறையாக இந்த திட்டத்தில் இணைகிறீர்களோ, அதே தேதியில் அடுத்தடுத்த மாதங்களில் பணம் செலுத்த வேண்டும்.அதை ஆட்டோ டெபிட் முறையில்கூட டெபாசிட் செய்து கொள்ளும் வசதிகள் உண்டு. எப்படி இருப்பினும் முதலீட்டாளர்கள்இத்திட்டம் பற்றி முழுமையாக தெரிந்து கொண்டு, அருகில் இருக்கும் அஞ்சலகங்களில் அல்லதுவங்கிக் கிளையில் கூட தொடங்கிக் கொள்ளலாம். எனினும் அதிகரித்து வரும் பணவீக்கத்தின்மத்தியில், இது போதுமானதா என்றால் நிச்சயம் இல்லை. எனினும் குறைந்த வருமானம் உடையஅடித்தட்டு மக்களுக்கு இது மிக நல்ல திட்டமே. எதிர்காலத்தில் நிதி ரீதியாக யாரையும்சார்ந்து வாழாமல் இருக்க நிச்சயம் ஓரளவுக்கு உதவிகரமாக இருக்கும்.
Disclaimer:All the above articles and news are published for informational purposes. It isimportant to plan with the advice of proper experts and not to make finaldecisions regarding investment or savings based on this. The management is notresponsible for any such planning based on this.
முதலீடு செய்வதற்கு முன்பு செபி பதிவு முதலீட்டு ஆலோசகர்களிடம் கலந்து ஆலோசித்த பின்னரே இறுதி முடிவு எடுக்க வேண்டும். அதுவே லாபகரமான முதலீட்டுக்கு உதவும். அதையும் தாண்டி இதன் அடிப்படையில்எடுக்கும் முடிவுகளுக்கு நிர்வாகம் பொறுப்பல்ல.